சிறுபான்மையினர் கடன் பெறுவதற்கான முகாம் – வாய்ப்பை பயன்படுத்தவும்..

கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக தகுதியுள்ளவர்களுக்கு சிறுதொழில்கள் செய்வதற்கான கடன் வழங்கும் முகாம் இன்று (25/10/2017) நடைபெறுகிறது.

அரசு பட்டியலில் சிறுபான்மையினராக அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த முகாமிற்கு செல்பவர்கள் தங்களுடைய முகவரி அடையாளங்களாகிய குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்துச் சென்றால் நலம்.

மேலும்  இத்திட்டத்தின் மூலம் தையல் தொழிலுக்கான மிசின், சிறிய உணவகம், சிறு வணிகம், பெட்டி கடை, பழ வியாபாரம் போன்ற தொழில்களை தொடங்க இந்த வாய்பினை பயன்படுத்தலாம்.