Home செய்திகள்உலக செய்திகள் உலகின் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையாளர், ஜெர்மன் நோயியலாளர், வானவியலாளர், ஆஸ்கர் மின்கோவஸ்கி நினைவு தினம் இன்று (ஜுலை 18, 1931).

உலகின் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையாளர், ஜெர்மன் நோயியலாளர், வானவியலாளர், ஆஸ்கர் மின்கோவஸ்கி நினைவு தினம் இன்று (ஜுலை 18, 1931).

by mohan

ஆஸ்கர் மின்கோவஸ்கி (Oskar Minkowski) ஜனவரி 13, 1858ல் கௌனாவுக்கு அருகிலுள்ள அலெக்சன் (Alexoten) என்று அழைக்கப்படும், லிதுவேனியாவில் பிறந்தார். லிதுவேனிய யூதக் குடும்பத்தில் பிறந்து பின் கிறித்தவ மதத்தைத் தழுவினார். ஆஸ்கர் மருத்துவப் படிப்பை 1888ல் முடித்தார். மேரி ஜோஹன்னா சேகல் என்பவரை 1894ல் மணமுடித்தார். 1904 வரை ஸ்ட்ராபௌர்க்கில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பின்னர் கிரிச்வேல்த்ல் மருத்துவப் படிப்பின் அவைத்தலைவராக இருந்தார். பின் பிரெஸ்லுவில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆஸ்கர் மின்கோவஸ்கி உலகின் வெற்றிகரமான முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையைச் (hepatectomy) செய்தவர்.

சர்க்கரை நோயின் காரணி போதுமான மண்ணீரல் சுரப்பு இன்மையே என்று ஆஸ்கர் நிரூபித்தார். சர்க்கரைநோயின் கட்டுப்பாட்டாளர்/மேலாளர் இன்சுலின் என்ற ஹார்மோன் என்ற உண்மையை பிரடரிக் பாண்டிங் பின்னரே கண்டறிந்தார். பிறகு ஆஸ்கரும், ஜோசப் வான் மேரிங்கும் இணைந்து மண்ணீரல் தான் சர்க்கரை கட்டுப்பாட்டை நடத்தும் தொழிற்சாலை என்று அறிந்தனர். ஆஸ்கர் மின்கோவஸ்கியின் சேவையைப் பாராட்டும் வகையில், இத்துறையில் அரிய ஆய்வு செய்யும் இளம் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் “மின்கோவஸ்கி விருது” என்ற விருதினை சர்க்கரை நோய்க்கான ஐரோப்பியக் கழகம் வழங்கி வருகிறது.

ஆஸ்கர் மின்கோவஸ்கி ஜெர்மன் நோயியலாளரும் (Pathologist), வானவியலாளரும் ஆவார். மின்கோவஸ்கியின் இளைய சகோதரர், உலகப் புகழ் பெற்ற கணிதவியலாளர் ஹெர்மன் மின்கோவஸ்கி ஆவார். ஹெர்மன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆசிரியரும் ஆவார். உலகின் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையாளர் ஆஸ்கர் மின்கோவஸ்கி ஜுலை 18, 1931ல் தனது 73வது அகவையில் மெக்லென்பர்க்-ஸ்ட்ரெலிட்ஸ், ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!