Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ரோட்டில் செல்பவர்களை எல்லாம் இழுத்து, பிடித்து வந்து டெஸ்ட் செய்ய முடியுமா என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி…

ரோட்டில் செல்பவர்களை எல்லாம் இழுத்து, பிடித்து வந்து டெஸ்ட் செய்ய முடியுமா என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி…

by ஆசிரியர்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிக்கு தேவையான நிதியை கருவூலங்களில் இருந்து எடுத்துக் கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மதுரையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி.

கொரோனா பாதிப்பு சம்பந்தமான மன நல ஆலோசனை மையம் துவக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் காணொளி மூலமாக மனநல ஆலோசகர்கள் பேசுவதை ஆய்வு செய்த அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,

தொற்றை கண்டறிய முன்கூட்டியே கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பொருளாதார நடவடிக்கையாக ஊரடங்கை தளர்த்தியதன் விளைவாக வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சமீபத்தில் தொற்று அதிகரித்துள்ளது. முதல்வர் சிறப்பு கவனம் எடுத்து கொராவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். மதுரையில் டெஸ்டிங் அதிகபடுத்தப்பட்டதால் தான் பாதிக்கபட்டோர் பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெஸ்ட் எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டும் என்று சொன்னது எதிர்கட்சிதான். ரோட்டில் செல்பவர்களை எல்லாம் இழுத்து பிடித்து வந்து டெஸ்ட் செய்ய முடியுமா,?..

எதிர்கட்சிகள் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக பாசிட்டிவ் அதிகமாகி வருகிறது என குற்றம் சாட்டி வருகிறார்கள். இறப்பு எண்ணிக்கையை அரசு மறைக்கவில்லை. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கையில் உண்மையை கூறினால் தான் மக்கள் விதிகளை கடைபிடிப்பார்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள் எனவே அரசு உண்மையை மறைக்காது. அரசு மருத்துவமனைக்கு முதலிலே வராமல் தனியார் மருத்துவமனைக்கு சென்று வருபவர்கள் தான் அதிகம் இறக்கிறார்கள். மதுரைக்கு உயிர் காக்கும் மருந்துகள் வந்துவிட்டது மக்கள் பயப்பட வேண்டாம், கொரானா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வண்ணம் ஆலோசனை கொடுக்க கவுன்சிலிங் சென்டர் முதல்முறையாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. கொரானா பாதித்தவர்களை சமூகத்தினர் ஒதுக்கி வைக்கக்கூடாது. சமூகத்திலிருந்து விலக்கி வைக்க கூடாது. கொரானா பதித்தவர்களை அரசு தத்தெடுத்து நோயிலிருந்து விடுபட நடவடிக்கை எடுத்து வருகிறது. உயிர் காக்கும் மருந்து மதுரைக்கு வந்துவிட்டது. மதுரையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. மாவட்டத்திற்குள் வருபவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடியும். இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர். முதல்வர் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தி முழு ஊரடங்கு அமல்படுத்த பிரதமர், மத்திய மருத்துவக்குழு ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். மதுரையில் 4 அரை லட்சம் குடும்பங்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிக்கு தேவையான நிதியை கருவூலங்களில் இருந்து எடுத்துக் கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!