Home செய்திகள் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடையை அமைச்சர் திறந்து வைத்தார்…

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடையை அமைச்சர் திறந்து வைத்தார்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை யை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.  இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் நடராஜன் தலைமை வகித்தார்.  மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜவகர்லால், வரவேற்புரை யாற்றினார்.

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள்  மருத்துவமனை வாயிலில் பேருந்துக்காக கடும் வெயிலிலும், மழைக்காலங்களில் மழையிலும் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை கருத்தில் கொண்டு இப்பிரச்சினைக்கு    முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் 12.65 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று ( ஜுலை 25) திறந்து வைத்தார். கடந்த 42 ஆண்டுகளாக இந்த நிழற்குடையை இங்கு யாராவது ஒருவர் அமைக்க மாட்டார்களா என்று ஏங்கியவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் இந்த பயணியர் நிழற்குடை யை நேர்த்தியாகவும், அழகாகவும் சிறந்த ஆர்டிடெக் மூலம் வடிவமைக்கப்பட்டு சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் சுப்பிரமணியமத்திடம் அறிவுறுத்தினேன். அதற்கேற்ப நேர்த்தியாகவும் அழகாகவும் இந்த பயணியர் நிழற்குடையை கட்டி முடித்திருக்கின்றனர். அதற்காக ஒப்பந்ததாரரை மனதார பாராட்டுகிறேன்.  மேலும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தாய் சேய் நலம் பிரிவு கட்டிடம் சுமார் 20 கோடியிலும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு  5.16 கோடி செலவில் கட்டடம் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில்   மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை,  பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை,    டாக்டர் சகாய ஸ்டீபன் ராஜ், நிலைய மருத்துவர்  டாக்டர்ஞானக்குமார்,    டாக்டர் கருப்பசாமி,.  டாக்டர் மலையரசு,   மாவட்ட கழக அவைத் தலைவர் செ.முருகேசன்,  முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்,  முன்னாள் வாலாந்தரவை ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க (ராம்கோ ) செயலாளர் மங்களநாதசேதுபதி,   மாவட்ட மீனவரணி செயலாளர் அருள், மண்டபம் ஒன்றிய கழக அவைத் தலைவர் ஆறுமுகம்,  நகர் இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், கூட்டுறவு பால் சங்க தலைவர் கங்கா கர்ணன், சுப்புத்தேவன் சோமசுந்தரம் உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!