கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா தீனியாத் மக்தப் மதரஸா 5ம் ஆண்டு நிறைவு விழா..

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா தீனியாத் மக்தப் மதரஸா 5ம் ஆண்டு நிறைவு விழா ஞாயிறு (13-05-2018)  மாலை 07.00 மணியளவில் முகைதீனியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு டாக்டர்.செய்யது ராசிக்தீன் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்விற்கு முகைதீனியா பள்ளி தாளாளர் மௌலா முகைதீன் மற்றும் கல்விக்குழு துணைத் தலைவர்  முகைதீன் இபுராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதரசா மாணவி மரியம் ஹலிலா கிராத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.  துவக்க உரையை முகம்மது ஹாசிம் வழங்கினார்.  சிறப்புரையை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஆசிகுர் ரஹ்மான் வழங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக முகைதீனியா பள்ளி கல்விக்குழு உறுப்பினர் அகமது மிர்சா மற்றும் மதரசா மாணவி சுமையா பாத்திமா ஆகியோர் நன்றியுரை  வழங்கினர். நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக மதரசா மாணவிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 60கும் மேற்பட்ட மதரசா மாணவிகள், ஜமாத்தார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.