Home செய்திகள் இராமநாதபுரத்தில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..

இராமநாதபுரத்தில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..

by ஆசிரியர்

ராமநாதபுரத்தில் புயல் எச்சரிக்கைபாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் கூறியதாவது:வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என அறிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில்பேரிடர் மேலாண் தொடர்பாக உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் எளிதில் தண்ணீர் தேங்கக்கூடிய 39 தாழ்வான பகுதிகளாக 39 பகுதிகளில் உரிய நேத்தில் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்கி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாமென மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள அனைத்து வித உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். மாவட்டத்தில் உள்ள23 பல்நோக்கு புயல் காப்பக மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகலை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடைக மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து மருத்துவக்குழுஅலுவலர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காவல், தீயணைப்புமற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட எந்நேரமும் தயாராக இருக் வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டஇயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.சுமன் (ராமநாதபுரம்),எஸ்.ராமன் (பரமக்குடி), இணை இயக்குநர்கள் (மருத்துவம்) ஏ.சகாய ஸ்டீபன்ராஜ், சி.பன்னீர்செல்வம், (கால்நடை பராமரிப்புத் துறை), கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.முருகேசன், மீன்வளத்துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன்,ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் சாமிராஜ் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!