Home செய்திகள் இரும்பாடி ஊராட்சியில் அரசு இலவச மருத்துவ முகாம்

இரும்பாடி ஊராட்சியில் அரசு இலவச மருத்துவ முகாம்

by mohan

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கலைஞரின் வருமுன் காப்போம் அரசு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு இரும்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரி பிரசாத் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்பிரபாகரன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பண்ணைசெல்வம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் கபீர் கிஷாமகேஷ் ஆர்த்தி மோனிஷா யோக பிரியா சந்திரமதி சந்திர பிரபா சந்திரஜோதி ஆகியோர் இப்பகுதியில் உள்ள கிராமம் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துமாத்திரை இலவசமாக வழங்கினார்கள். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜா சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் இனிய குமார் சதீஷ் விமல் உதவியாளர்கள் கண்ணன் பிரகதீஸ்வரன் ஆகியோர் திட்டத்தில் மக்களுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சையும் அதன் பயன் குறித்தும் கிராம மக்களிடம் எடுத்துக் கூறி பேசினார்கள். ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் நன்றி கூறினார். முகாமில் பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை மருத்துவம் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் குடல் மருத்துவம் இயன்முறை மருத்துவம் காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் சிறுநீரகவியல் மருத்துவம் எலும்பு மூட்டு மருத்துவம் இருதய நோய் மருத்துவம் கண் மருத்துவம் தோல் மருத்துவம் பல் மருத்துவம் மனநல மருத்துவம் சித்த மருத்துவம் நரம்பியல் மருத்துவம் முதியோர் நல மருத்துவம் ஆகிய மருத்துவ சேவை நடைபெற்றது இதில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ராஜரத்தினம் சமுதாய நல செவிலியர் நித்திய கல்யாணி பகுதி சுகாதார செவிலியர் உஷா கிராம சுகாதார செவிலியர் இந்திரா உள்பட நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் இதில் பங்கேற்று ரத்த முழு பரிசோதனை ரத்த சக்கரை அளவு கண்டறிதல் ரத்த கொழுப்பு அளவு சளி மாதிரி பரிசோதனை மற்றும் இசிஜி ஆகிய பரிசோதனைகள் இப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்களுக்கு பரிசோதித்தனர். இப்பகுதியில் உள்ள இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு ஆஸ்பத்திரி இல்லாததால் இப்பகுதி கிராம மக்கள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை எடுப்பதற்காக வாடிப்பட்டி சோழவந்தான் மன்னாடிமங்கலம் ஆகிய பகுதிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் சென்று சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ளனர் பல ஆண்டுகளாக இங்கு அரசு ஆஸ்பத்திரி ஏற்படுத்தித் தர கேட்டுக் கொண்டு வருகிறார்கள் இந்த முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர் கலந்து கொண்டதிலிருந்து இப்பதிக்கு அரசு ஆஸ்பத்திரி தேவை என்பது தெரிய வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!