Home செய்திகள் 1981 ஆண்டுக்கு பின் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதால் கழுங்கில் பொங்கல் வைத்து வழிபட்ட கிராம மக்கள்.

1981 ஆண்டுக்கு பின் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதால் கழுங்கில் பொங்கல் வைத்து வழிபட்ட கிராம மக்கள்.

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதால்., அதை வரவேற்கும் விதமாக கிராம பெரியோர்கள் இன்று பொங்கல் வைத்து., கழுங்கில் அமைந்துள்ள அனைத்து கற்களுக்கும் சந்தனம், குங்குமம் வைத்து தேங்காய் பழம் கற்பூரம் வைத்து பூஜை செய்து தெய்வமாக எண்ணி வரவேற்றனர்.மதுரை திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கூடக்கோவில் பகுதியில் அமைந்துள்ளது கூடக்கோவில் கிராம கண்மாய். இந்த கணமாய்யானது 150 ஏக்கர் பரப்பளவும்., 5 ஆயிரம் மீட்டர் சுற்றளவு கொண்ட இக்கம்மாய் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இப்பகுதியில் அமைந்துள்ள கண்மாய் வறண்ட காணப்படும். பெரும்பாலும் கிராமவாசிகள் குடிப்பதற்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் நிலத்தடி நீரை பயன்படுத்தி வந்தனர்.இதன் காரணமாக இந்தப் பகுதியில் தண்ணீர் பிரச்சனை நிலவி வந்த சூழ்நிலையில் விவசாயம் செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த கன மழை மற்றும் மதுரை அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்த கன மழையினாலும்., வைகை அணையின் முழு கொள்ளளவு எட்டிய நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் மதுரையில் பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.அதன் தொடர்ச்சியாக., கூடக்கோவில் பகுதியில் அமைந்துள்ள கூடக்கோவில்கண்மாய் 1981ஆம் ஆண்டு மறுகால் பாய்ந்ததை தொடர்ந்து., தற்போது 40 ஆண்டுகளுக்கு பின் கண்மாய் முழுவதும் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்வதால் இனிவரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் விவசாயம் செய்யலாம் என தற்போது விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 40 ஆண்டுக்கு பின் மறுகால் பாய்வதால் கிராம பெரியவர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஊர் வழக்கப்படி பொங்கல் வைத்து தெய்வமாக எண்ணி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!