Home செய்திகள் மின்வாரியம் பராமரிப்பு பணியின் போது வெட்டிய மரத்தை அகற்றுவது மாநகராட்சி அல்லது மின்வாரியம் யார் எடுப்பது தீப்பற்றி எரியும் மரக்கிளைகள் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.

மின்வாரியம் பராமரிப்பு பணியின் போது வெட்டிய மரத்தை அகற்றுவது மாநகராட்சி அல்லது மின்வாரியம் யார் எடுப்பது தீப்பற்றி எரியும் மரக்கிளைகள் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.

by mohan

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணி செய்து வருகிறார்கள் பராமரிப்பு பணியின் போது மின் வயர் உள்ள மரக்கிளைகளை வெட்டி நடு சாலையிலே மின்வாரிய ஊழியர்கள் போட்டு செல்கிறார்கள் இதனால் பல்வேறு பகுதிகளில் சாலை முழுவதுமே மரக் கிளைகள் மற்றும் மரத்துண்டுகள் ஆகவே காணப்படுகிறது இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகளும் கேட்டதற்கு இது மின்வாரிய ஊழியர்கள் தான் அகற்ற வேண்டும் எனவும் தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒரு கேட்டதற்கு எங்களுக்கு வெட்ட மட்டும்தான் அனுமதி நாங்கள் எடுக்க மாட்டோம் என அவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கு வேலை பளு அதிகமாகிறது தினசரி குப்பை அழுவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை இதில் மரக்கிளைகள் தினசரி 5 லாரி முதல் 8 லாரி வரை சேருகிறது இதை எடுப்பதற்கு தனியாக ஆட்கள் யாரும் கொடுக்கவில்லை இதனால் சாலையில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்படுகிறது அது காய்ந்த நிலையில் இருப்பதால் சிலர் அதில் தீ வைத்து செல்வதாலும் சிகரெட்டை அணைக்காமல் போட்டு விடுகிறார்கள் இதனால் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்குகிறது இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது குறிப்பு தற்போது மதுரை மாவட்ட ஆட்சியாளர் இருக்கும் அனிஸ் சேகர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றியபோது ஒரு உத்தரவு பிறப்பித்தது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியின் போது மரக் கிளைகளை வெட்டும் பொழுது மரக்கிளைகளை அவர்களை அகற்ற வேண்டுமென என உத்தரவு பிறப்பித்தது தகவல் வந்துள்ளது ஆனால் இவர்கள் அதை செய்ய மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது இதற்கு தீர்வு தான் என மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காணும் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் உரிய தீர்வினை காண மாவட்ட நிர்வாகம் மின் வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பேசி உரிய தீர்வு காண முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!