நோய்த்தொற்று கண்டறியும் ஸ்கேன் சென்டர் சென்றால் நோய்த்தொற்று வருவது உறுதி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா உணவகம், துணிக்கடை மற்றும் டீக்கடையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் சொல்லும் அரசாங்கம். மதுரை கே.கே நகரில் உள்ள கேஜி ஸ்கேன் சென்டரில் முற்றிலுமான விதிமீறல் ஈடுபடுவதை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருக்கிறதா? பலவிதமான நோயாளிகள் (கொரோனா பரிசோதிக்க வரும் நோயாளிகள் அதிகம்) ஸ்கேன் எடுப்பதற்காக வரும் இடத்தில் முற்றிலும் சமூக இடைவெளி இல்லாத காரணத்தினால் சமூக பரவல் அதிகமாக ஏற்படக்கூடிய அவலம் ஏற்படுகிறது. தெரிந்தே கொரோனாவை பரப்பும் வேலையை இந்த மருத்துவமனை செய்து வருகிறது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இதைத் தடுக்கும் பொருட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் உருவாக்கும் இடமாக மாறிவிடும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.