
சிவகங்கை மாவட்டம்தேவகோட்டையை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லெட்சுணன் (78) இன்று காலை 6 மணி அளவில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். தேவகோட்டையில் உள்ள அவரது இல்லத்தில், இன்று காலை 9 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக உறவினர்கள் தகவல். இவரது மனைவி மீனாட்சி ஆச்சி என்பவரும் உடல் நலக்குறைவு காரணமாக காரைக்குடி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.