தொல். திருமாவளவன் சகோதரி மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மேற்கு ஒன்றியம் சார்பாக தொண்டமான்பட்டியில்அஞ்சலி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி திடீரென்று இயற்கை எய்தினார்.,அன்னாரது மறைவிற்கு சகோதரருமான தொல் திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மிகவும் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.,அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே தொண்டமான் பட்டி ஊராட்சியில் மதுரை மேற்கு ஒன்றிய சார்பாக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டும், சகோதரி பானுமதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.,இதில் கிழக்குத் தொகுதி செயலாளர் கார்வண்ணன் மாவட்ட அமைப்பாளர் அரசு முத்துப்பாண்டி மகளிர் மாவட்ட செயலாளர் செல்வி மாவட்ட துணை அமைப்பாளர் சித்ரா ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன் முகாம் செயலாளர் தன வலவன் முன்னால் முகாம் செயலாளர் திருமா சுரேஷ் மதுரை மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதி வளவன் ஒன்றிய துணை அமைப்பாளர் பறை முருகன் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.,

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..