மீண்டும் பறந்தது தேசிய கொடி

மதுரை ரயில் நிலையத்தில் கடந்த எட்டாம் தேதி இரவு இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் பெய்த மழையில் நுழைவாயில் அமைந்துள்ள தேசியக் கொடியானது கிழிந்த படி இருந்தது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக தேசியக்கொடிகள் இந்த நிலையிலேயே பறந்ததை கண்டு மதுரை மாவட்ட ஆட்சியாளருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக அன்று மதியமே தேசியக் கொடியானது கீழே இறக்கப்பட்டது

.மீண்டும் இரண்டு நாட்களில் புதிய கொடி ஏற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர் .எனினும் இன்று காலை மீண்டும் புதிய தேசியக் கொடியானது ஏற்றப்பட்டு இதனால் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தேசியக்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தி சல்யூட் எடுத்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்