Home செய்திகள் பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய விளக்கு கம்பங்கள்- 21.7 கோடி ருபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மீனாட்சி கோயில் தெருக்கள்

பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய விளக்கு கம்பங்கள்- 21.7 கோடி ருபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மீனாட்சி கோயில் தெருக்கள்

by mohan

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கின்ற சாலைகளிலும் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளிலும் பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய விளக்கு கம்பங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றன.மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக பெரியார் பேருந்து நிலையம் மேம்பாலங்கள் பல அடுக்கு வாகன காப்பகங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் அனைத்து தெருக்களிலும் சித்திரை வீதிகளிலும் தற்போது பேவர் பிளாக் பதிக்கப்பட்ட சாலையின் இருபுறமும் பாரம்பரியமான வடிவத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.ஊரடங்கு காலகட்டத்திலும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.மதுரை நேதாஜி சாலையில் சாலையின் இரண்டு புறங்களிலும் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.மதுரை நகரின் புராதன சின்னங்களை இணைக்கும் புராதான வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 21.7 கோடி திட்ட மதிப்பீட்டில்இந்த பணிகள் அனைத்தும் நடைபெறுகின்றன.மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் மிக முக்கியமான சாலையான இந்த நேதாஜி சாலையில் பாரம்பரியமான முறையிலும் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த விளக்குகள் இரவு நேரங்களில் பழமையை நினைவூட்டும் வண்ணமாக இருக்கும் என்று ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்….\

..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!