Home செய்திகள் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோக கலைகளை நிகழ்த்திக் காட்டிய மதுரையை சேர்ந்த மாணவர்கள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோக கலைகளை நிகழ்த்திக் காட்டிய மதுரையை சேர்ந்த மாணவர்கள்

by mohan

உடல் ஆரோக்கியம் மன தைரியம் தன்னம்பிக்கை என்று ஆணிவேராக திகழும் யோகா அக்கறையால் தான் நம் முன்னோர்கள் மனம் உடல் வலிமையுடன் வாழ்ந்தார்கள்.அதனால்தான் இன்றும் யோகா போன்ற தற்காப்பு கலைகளுக்கு நாட்டில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் ஆரோக்கியம் மன வலிமை தைரியம் தன்னம்பிக்கை போன்றவற்றை வளர்க்கும் வகையில் யோகா உள்ளிட்ட தற்காப்புக் கலை பயின்று வருகின்றனர்.அந்த வகையில் சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாக யோகா கலையில் சாதித்துவரும் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த இரு சக்கர வாகனம் வாட்டர் சர்வீஸ் செய்யும் ஜமஸ்கான் என்பவரின் மகன்களான அசாரூதின், சல்மான்கான் ஆகிய இரண்டு மாணவர்கள் இன்று ஆணி படுக்கை, கண்ணாடி டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் மீது யோகாசனம் செய்து நிகழ்த்திக் காட்டினர்.அதாவது கூர்மையான ஆணி பலகை மீது அமர்ந்து திபாஸ்ணம், தனுராசனம், ஏகபாதசனம் மற்றும் கண்ணாடி டம்ளர் வைத்து ஓம்காரசணம், மயூராசனம் உள்ளிட்ட யோகாசனத்தின் பல்வேறு விதமான யோகாசன கலைகளை நிகழ்த்திக் காட்டினர்.பின்னர் பேட்டியளித்த அசாருதீன் கூறுகையில்,

நான் 12 வருடங்களாக யோகாசனம் செய்து வருகிறேன் ஆசனம் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மன தைரியம் வலிமை தன்னம்பிக்கை கிடைக்கிறது,மேலும் இந்த யோகா கலையின் மூலம் எந்த ஒரு நோயும் இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!