Home செய்திகள் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் சித்தா, ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது- அமைச்சர் ஆர்.பி.

நோய்த்தொற்று ஏற்பட்டாலும் சித்தா, ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது- அமைச்சர் ஆர்.பி.

by mohan

மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் தலைவர் நெல்லை பாலு சார்பாக மதுரை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை   வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் . வினய் தலைமையில் மதுரை மாநகர ஆணையாளர் விசாகன் முன்னிலையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன்,வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை மற்றும்ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு கப சுரகுடிநீர், முக கவசம், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கினார் .நிகழ்வில் பேசிய ஆட்சியர் “கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர்கள், முகக்கவசங்களை பயன்படுத்துவது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

வில்லாபுரத்தில் காய்கறி விற்று குடும்பத்தைக் காப்பாற்றும் 6 ஆம் வகுப்பு சிறுமிக்கு ரோட்டரி கிளப் சார்பில் 5 ஆயிரம் ரூபாயையும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறுமிக்கும் அவரது தம்பிக்கும் தலா 5 ஆயிரம் ரூபாயையும் வழங்கினர். 13 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும், 12 ஆயிரம் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கும் என மொத்தம் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நன்மருந்து வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் சார்பாக பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆடிட்டர் சேது மாதவா, நந்தினி ரியல் எஸ்டேட் பிரபு, பேன் ஹவுஸ் சரவணன், ராஜ்குமார் மதுரை கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் பாலகுரு உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் போது பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “

சகோதரி நேத்ரா தனது கல்விக்காக வைத்திருந்த தொகையை வறுமையில் இருப்போருக்கு வழங்கி உலக அளவில் புகழ்பெற்றுள்ளார்.முதல்வர் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு அரனை ஏற்படுத்தி, நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதிக மருத்துவ சோதனைகளைச் செய்வதும், அதிக குணமடைந்தவர்களைக் கொண்டதும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளதும் தமிழகத்தில்தான். கொரோனா வைரஸுக்கு மருந்தில்லாத சூழலில் விழிப்புணர்வு குறைவால் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் சித்தா, ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழக அரசு.இன்று நம் முன்னால் இருக்கும் சவால் என்ன? பேரிடரை எதிர்கொண்டு சமாளிக்க தேவையான முதல் ஆயுதம் நம்பிக்கை. அதுதான் தற்போதைய தேவையும் கூட. நம்மால் இதனை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.அனைத்து இடங்களிலும் கொரோனா சோதனை நடைபெறும் நிலையில், அதிலிருந்து தப்பிக்க பரிந்துரை கடிதத்துடன் வருகிறார்கள்.அனைத்து இடங்களிலும் கொரோனா சோதனை நடைபெறும் நிலையில், அதிலிருந்து தப்பிக்க பரிந்துரை கடிதத்துடன் வருகிறார்கள்.

80% மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாலும், வகுப்பறையில் மாப்பிள்ளை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்களை கரையேற்றுவது போல் மீதமுள்ள 20% பேரை அடக்குவது கடினமாக உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் கிருமி நாசினி அடிக்காத இடம் என்று எதுமில்லை. ஆசிரியர், பெற்றோர், மாணவர்களின் உள்ளமறிந்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கொடுத்த கருத்தின் அடிப்படையிலேயே அந்த முடிவு எடுக்கப்பட்டது.ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்பு கொள்ளும் போது, கொரோனோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களை பாதுகாக்க, மருத்துவர்களை பாதுகாக்க, காவல்துறையினரை பாதுகாக்க என பல தரப்பில் உழைப்பவர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களையும் அதன் வழியாக மாணவர்களயும் காப்பதே நோக்கம். நியுசிலாந்து போதுமான விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதால், கொரோனா ஒழிப்பில் முன்னோடியாக திகழ்கிறது. மக்களும் ஒத்துழைத்ததால் அது சாத்தியமாயிற்று. ஆகவே, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com