Home செய்திகள் கருணாநிதி குடும்பத்தினரை தவிர திமுகவில் உள்ள அனைத்து தலைவர்களும் முதல்வரின் செயல்பாடுகளை பாராட்டி வருகிறார்கள். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

கருணாநிதி குடும்பத்தினரை தவிர திமுகவில் உள்ள அனைத்து தலைவர்களும் முதல்வரின் செயல்பாடுகளை பாராட்டி வருகிறார்கள். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

by mohan

முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரை தவிர திமுகவில் உள்ள அனைத்து தலைவர்களும் தமிழக முதல்வரின் செயல்பாடுகளை பாராட்டி வருகிறார்கள் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.சுகாதாரத்துறை செயலாளர் மாற்றம் குறித்த கேள்விக்கு,நிர்வாக மாறுதல் காரணமாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது குறித்து பதிலளிக்க முடியவில்லை.செயல்படுங்கள் முதல்வரே என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு,உதயநிதி ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதியும், அவரது தந்தையும் சேர்ந்து கொண்டு தற்போது அரசியல் செய்து வருகிறார்கள்.திமுகவில் தற்போது மூத்த தலைவர்களே இல்லையா?உதயநிதி ஸ்டாலின் எல்லாம் கேள்வி கேட்கும் நிலைக்கு அக்கட்சியில் நிலைமை உள்ளது. திமுக என்றால் அவர்களது குடும்பம் மட்டும் தான் அரசியல் செய்யும். கருணாநிதி குடும்பத்தை தவிர மற்ற அனைவரும் தமிழக முதல்வரின் செயல்பாடுகளை பாராட்டி வருகிறார்கள்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மதுரையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார். நிச்சயமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை முதல்வரிடம் எடுத்துச்செல்வோம்.நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை களத்தில் கோட்டை விடமாட்டோம்.மதுரையின் மைந்தர்களாக இருக்கக்கூடிய வருவாய்த்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சரும் ஆகிய நாங்கள் இணைந்து மதுரையை முன்னெடுத்துச் செல்வதில் சிறப்பாக பணியாற்றுவோம்.கட்சி பேதமின்றி நலத்திட்ட உதவிகளை மதுரை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.மதுரை மாவட்டத்தில் அதிகமான நபர்கள் சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.எவ்வளவு தூரம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலும் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் முக கவசத்தை அணிய வேண்டும். என்னதான் சட்டம் போட்டாலும் எவ்வளவு தூரம் மக்களை அடக்கி வைக்க முடியும். பொதுமுடக்கத்தால்மூன்று மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.பொது மக்களின் நிலையை அறிந்து தான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு போடுங்கள் என்றால் எப்படி போட முடியும்.தமிழக முதல்வர் தமிழகத்தின் நிதிநிலை பொறுத்துதான் நியாயவிலைக் கடைகளில் மீண்டும் நிவாரணம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!