Home செய்திகள் கப்பலூர் சிட்கோவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் பற்றி எரிந்த தீ. விரைந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு..

கப்பலூர் சிட்கோவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் பற்றி எரிந்த தீ. விரைந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு..

by mohan

மதுரை மாவட்டம் கப்பலூர் சிட்கோ தொழில்பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக 144 தடை உத்தரவு காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. சுமார் அரை டன் அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரத்தில் கொட்டிக்கிடந்தது. இதில் திடீரென தீப்பிடித்து மலமல என எரிய தொடங்கியது. வெயில் காரணமாக தீ பிடித்ததால் அல்லது யாரேனும் புகை பிடித்து விட்டு அணைக்காமல் அதன்மேல் போட்டார்களா என தெரியவில்லை. இதனால் அப்பகுதியே கரும் புகை மண்டலமாக மாறியது. அதை பார்த்த பொதுமக்கள் திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு எரிந்து கொண்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அணைத்தனர். அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. திருமங்கலம் தீயணைப்புத்துறையினர் செயல்பட்டால் பெரும் விபத்து அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என குறிப்பிடத் தக்கதாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!