62
மாரியம்மன் தெப்பக்குளத்தில் தொடர்ந்து படகு சவாரி இயக்க பொதுமக்கள் கோரிக்கை..
மதுரையில் கடந்த வாரங்களில் தொடர் மழை காரணமாகவும் வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தற்போது வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. மேலும், பள்ளி கல்லூரி விடுமுறை என்பதால் பொதுமக்கள் தெப்பக்குளத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் படகு சவாரிக்கு தயார் நிலையில் இருப்பதை காண முடிகிறது. இதனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷத்துடன் படகு சவாரி செய்கிறார்கள். விடுமுறை காலங்களில் மட்டும் இல்லாமல் எப்பொழுதும் ஆண்டு முழுவதும் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி படகு சவாரி நடைபெற வேண்டும் என்று பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர் சிவா வேண்டுகோள் வைக்கின்றனர். செய்தியாளர், வி. காளமேகம்
You must be logged in to post a comment.