Home செய்திகள் மதுரை ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கும் வரை மக்கள் நலன் பேணப்படுமா?? அல்லது அலைக்கழிக்கப்படுவார்களா?.. விதிமீறல் என்ற பெயரில் பல இடங்களில் தனியார் நிறுவனங்களால் வைக்கப்பட்ட நிழல் குடை தடுப்புகள் அகற்றம்…

மதுரை ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கும் வரை மக்கள் நலன் பேணப்படுமா?? அல்லது அலைக்கழிக்கப்படுவார்களா?.. விதிமீறல் என்ற பெயரில் பல இடங்களில் தனியார் நிறுவனங்களால் வைக்கப்பட்ட நிழல் குடை தடுப்புகள் அகற்றம்…

by ஆசிரியர்

மதுரை மாநகர் என்றுமே கலாச்சாரம் மாறாத பாரம்பரிய மிக்க ஊராகும். மதுரைக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு, எளிமையான மக்கள், சாதாரண மனிதனும் எளிதாக வாழ்கையை கொண்டு செல்லும் ஊர், பக்தியமயமான புண்ணிய ஸ்தலம் என எத்தனை விஞ்ஞான மாற்றங்கள் வந்தாலும், மதுரை மண்ணின் வாசம் மாறாமலே இருந்து வந்தது. கடந்த வருடம் அந்த பாரம்பரியம் மாறாமல் மக்கள் நலன் கருதி ஸ்மார்ட் சிட்டி என ம பழமையான பொியார் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை உள்ளடக்கிய நவீன பேருந்து நிலைய திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக பொியார் பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டது.

இத்திட்டம் தொடங்கும் முன்பு மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை போக்குவரத்து கழகமும் இணைந்து பல் வேறு அமர்வுகளில் பேருந்து நிலையம் மூடப்படுவதால் உருவாக்கப்படும் தற்காலிக நிறுத்தங்களில் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் மற்றும் வழிகாட்டும் மையம் அமைத்தல் போன்ற பல் வேறு விசயங்கள் ஒத்துக்கொள்ளபபட்டு பல் வேறு இடங்களில் நகர் பேருந்து நிலையங்களும் அதற்கான நிழற்குடைகளும் அமைக்கப்பட்டது.

பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடைகள் மிகவும் சாதாரண வகையிலும், மக்களுக்கு வெயில் அல்லது மழை காலங்களில் எந்த வகையாலும் முழுமையான பாதுகாப்பு தர முடியாத இயல்பிலேயே இருந்தது. இந்த குறையை போக்கு வண்ணம் சில நல்லுள்ளம் கொண்ட போக்குவரத்து துறையைச் சார்ந்தவர்கள் பல முயற்ச்சிகளுக்கு பிறகு சில தனியார் நிறுவனங்களின் உதவியோடு, பேருந்து நிழற்குடைகளை பொதுமக்களுக்கு தேவையான தகவல்களுடன் மேம்படுத்தினர்.

ஆனால் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தனியார் நிறுவனங்களில் விளம்பரம் இருப்பதை காரணம் காட்டி முறையான முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கப்படுவதாக பொது மக்களிடம் இருந்து குற்றச்சாட்டு கிளம்புகிறது, இதை பற்றி பெயர் கூற விரும்பாத போக்குவரத்து அதிகாரி கூறும்பொழுது, உண்மைதான் இந்த விசயத்தில் நகராட்சி விதிமீறல் என்ற அடிப்படையில் மட்டும் பார்க்காமல் பொதுமக்களின் நலன் மற்றும் சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு யாருக்கும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுருக்கமாக கூறி முடித்ததார்.

மதுரை மாநகராட்சி மக்கள் நலனை சிந்திக்குமா?? மக்களுக்கு பலன் அளிக்காத விதிமுறையை பின்பற்றுமா?? பொறுத்திருந்து பார்ப்போம்..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!