மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா..
மதுரை மத்திய சிறை மூலமாக சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சான்றிதழ் உடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில்,
மதுரை மத்திய சிறையில் *JK பென்னர்* நிறுவனம் மற்றும் *பியர்ஸ் ஹியூமன் சைல்டு சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட்* இணைந்து சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிகள் வழங்குவதற்கு முன்வந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது
முதற்கட்டமாக மதுரை மத்திய சிறையில் உள்ள 30 தண்டனை சிறைவாசிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய வெல்டிங் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . 30 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி நிறைவு நாளான இன்று பயிற்சி முடித்த சிறைவாசிகளுக்கு ஜே கே பின்னர் நிறுவனம் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் 30 நாட்களுக்கு சிறைவாசிகளுக்கு தலா 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் மதுரை மத்திய சிறையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு. பழனி அவர்கள் மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு .சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் JK பென்னர் மனித வள மேம்பாடு நிர்வாகி திரு. இக்னேசியஸ் JK பென்னர் நிறுவன திறன் மேம்பாட்டு அலுவலர் திரு. வீராச்சாமி பியர்ஸ் டிரஸ்ட் இயக்குனர் திரு. காட்டுச்சாமி ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், சின்ன கருப்பன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிகரமாக பயிற்சி முடித்த சிறைவாசிகளுக்கு* *மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின்* சார்பில் செயல்படும் ஸ்கில் இந்தியா திட்டத்தின் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும் தொடர்ந்து தகுதியான சிறைவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கார்பெண்டர் மற்றும் மோட்டார் ரீவைண்டிங் டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகளும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.