Home செய்திகள் பருத்தி மூட்டைகளை அடுக்கி வைக்க இடப் பற்றாக்குறையால் புலம்பித் தவிக்கும் பருத்தி விவசாயிகள் . ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

பருத்தி மூட்டைகளை அடுக்கி வைக்க இடப் பற்றாக்குறையால் புலம்பித் தவிக்கும் பருத்தி விவசாயிகள் . ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

by mohan

மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பரபரப்பான சூழலில் பருத்தி ஏலம் நாகை விற்பனை கூட செயலாளர் கோ.வித்யா தலைமையில் நடைபெற்றது.இதில் இந்திய பருத்தி கழகம் சார்பில் ரமேஷ், ஆனந்தன் கலந்து கொண்டு சுமார் 1,200 குவிண்டால் அதிகபட்ச விலை ரூ.5,500/- க்கும். குறைந்தபட்ச விலை ரூ. 5,328/- க்கும் கொள்முதல் செய்தனர்.முன்னதாக, பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்து கேட்டுகொண்டார்.

மேலும், தஞ்சை மாவட்ட வியபாரிகள் திருமாறன், தினகரன், விழுப்புரம் பழனி, சந்திரன், தேனி மில் சுப்புராஜ், மற்றும் பல மாவட்ட வியபாரிகள் 12 நபர்கள் கலந்து கொண்டு சுமார் 3,000 குவிண்டால் கொள்முதல் செய்தனர்.இதில், அதிகபட்ச விலை ரூ. 4,620/-க்கும், குறைந்த பட்சம் விலை ரூ. 3,500/- க்கும் கொள்முதல் செய்தனர். மேலும் இந்த ஏலத்தில் 1,500 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!