Home செய்திகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் காலம்வரையில் சுயஉதவிக்குழு கடனை திருப்பிச் செலுத்துவதிலிருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தூத்துக்குடி இளஞ்சிறுத்தைகள் மனு..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் காலம்வரையில் சுயஉதவிக்குழு கடனை திருப்பிச் செலுத்துவதிலிருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தூத்துக்குடி இளஞ்சிறுத்தைகள் மனு..

by Askar

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் காலம்வரையில் சுயஉதவிக்குழு கடனை திருப்பிச் செலுத்துவதிலிருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு இளஞ்சிறுத்தைகள் மனு.

உலகையே கொரோனா வைரஸ் உலுக்கியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் இதன் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடுவதை முழுமையாக தவிர்க்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் செய்யும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கூலித்தொழிலாளர்கள் வேலையின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

ஆனால், இவ்வளவு நெருக்கடியிலும் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மூலம் வலுக்கட்டாயமாக மக்களை குறிப்பாக பெண்களை அச்சுறுத்தி பணத்தைப் பறித்துச்செல்லும் நிலை நீடிக்கிறது. தற்போது வேலையின்றி வீட்டிலேயே மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலையில் சுயஉதவிக்குழு வட்டிக்கடனை அடைக்க மீண்டும் வட்டிக்கு கடன் வாங்கும் அவல நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலை தொடருமெனில் மாவட்டம் முழுவதும் சுயஉதவிக்குழுவில் இடம்பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான பெண்களும், அவர்களின் குடும்பங்களும் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

எனவே மாண்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இப்பாதிப்பை கவனத்தில்கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் காலம்வரை, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்வரை சுயஉதவிக் குழுக்கடனை திருப்பிச்செலுத்திவதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒரு பொது அறிவிப்பை மக்களுக்காக வெளியிடக்கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் 20-03-2020 அன்று பதிவுத்தபால் (Registered Post) வழியே கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.

மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை, நம் தாய்மார்களை கட்டாயக் கடன் வசூல் சுமையிலிருந்து பாதுகாத்திட இக்கோரிக்கைக்கு அனைத்து தரப்பினரும் தங்களின் மேலான ஆதரவைத் தந்து வலுசேர்க்க வேண்டுமென மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

சு.விடுதலைச்செழியன் மாவட்ட அமைப்பாளர் – இசிஎபா விசிக – தூத்துக்குடி தெற்கு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!