
சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரும் நகரங்களில் மாநகராட்சி சம்பந்தப்பட்ட சான்றிதழ்களான இறப்பு, பிறப்பு சான்றிதழ்கள் போன்ற அனைத்து வகையான நகராட்சி வழங்கும் சான்றிதழ்களும் ஆன்லைன் மூலம் பெரும் வசதி செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது அனைத்து நகராட்சி மற்றும் ஊராட்சிகளிலும் ஆன் லைன் வசதி செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகராட்சியிலும் ஆன்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அலைய வேண்டிய நேரம் குறைவாகும். ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை என்பதுதான் குறை. நகராட்சி துரித நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்…
Good information