இன்றைய கீழக்கரையின் அவல நிலைக்கு யார் காரணம் … துண்டு பிரசுரம் மக்கள் பார்வைக்கு…

அன்று முதல் இன்று வரை அடிப்படை பிரச்சினையான சுகாதாரம் முதல் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் காரணங்கள் மட்டுமே கூறக்கூடியது… கீழக்கரை நகராட்சி நிர்வாகம் என்றால் மிகையாகாது.

பொது நிதி, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நிதிகள் பல கோடி ஒதுக்கப்பட்டும், அதன் பலனை முழுமையாக அடைய முடியாத  பரிதாப நிலைதான் கீழக்கரை மக்களின் நிலை…

பொய்யான வாக்குறுதி அளித்த  அரசியல் வாதிகள், பொறுப்பற்ற முறையில் பணியாற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களின் மெத்தனப்போக்கு என்று  தொடரும் கீழக்கரையின் இன்றைய அவலநிலைக்கு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

முழுமையான வகையில் கொடுக்கப்பட்ட பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்களின் தரமற்ற வேலைகளால் சில நாட்களில் சிதிலமடைந்த சாலைகள்,வாறுகால்கள் நகராட்சி நிர்வாகத்தின் நிலவும் பொறுப்பற்ற நிலையால்  கீழக்கரைக்கு இந்த அவலநிலை.

கீழக்கரை நகராட்சிக்கு எத்தனை ஆணையர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்…. மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.. இதுதான் கீழக்கரையின் இன்றைய நிலை.

வரி விதிப்பில் மட்டும் மிகையான நகராட்சி, ஆனால் எந்த திட்டமும் இல்லாமல்  வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நகராட்சி… இதுதான் நம் கீழக்கரை நகராட்சி…. மாறுமா இந்த அவல நிலை..?

அரசு ஒதுக்கும் நிதியில் கீழக்கரையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கையும், போராட்டமும் தொடரும் விரைவில்..!

கீழக்கரையில் உள்ள சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு…

#Paid Promotion