
கீழக்கரையில் சுகாதாரத்திற்கான நிரந்தர தீர்வு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. தினமும் ஏதாவது ஒரு தெருவில் கழிவு நீர் ஓடுவதும், பின்னர் பல கோரிக்கைகளுக்கு பிறகு அதை நிவர்த்தி செய்வதும் வாடிக்கையான செயலாகி விட்டது. அதுவும் ஜும்ஆ தினமான வெள்ளிக்கிழமை என்றால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான கழிவு நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விடும்.
இன்று (26-05-2017) கீழக்கரை தெற்குத் தெரு பெரிய பள்ளி வாசல் அருகில் கழிவு நீர் வாய்காலில் இருந்து காலையில் இருந்தே வழிந்து ஒடுகிது. அவ்வழியில் நடந்து செல்லும் பொழுது மக்கள் முகம் சுழித்த வண்ணம், நடந்து செல்லுவதற்கு மிகவும் சிரமம் அடைந்துள்ளார்கள். அந்த பகுதி முழுவதும் சாக்கடை வழிந்தோடுவதால் துர்நாற்றமும் அதிகரித்துள்ளது. இந்த சுகாதாரக் கேடினால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் மலேரியா மற்றும் டெங்கு போன்ற தொற்று நோயால் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு நகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெருவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தகவல்:- சௌதியில் இருந்து கீழை முகம்மது இர்சத்.
You must be logged in to post a comment.