Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பொலிவிழந்த கீழக்கரை சீதக்காதி சாலை… அடங்கிப்போன ஆராவாரம்… என்று திரும்பும் அந்த பொலிவு…

பொலிவிழந்த கீழக்கரை சீதக்காதி சாலை… அடங்கிப்போன ஆராவாரம்… என்று திரும்பும் அந்த பொலிவு…

by ஆசிரியர்

கீழக்கரை என்றாலே அன்பான மக்கள், ஈகை குணத்தின் அடையாளம், கூட்டுக் குடும்பங்கள், சமய நல்லிணக்கம், எப்பிரச்சினைக்கும் முன் நிற்கும் சமுதாய எண்ணம் கொண்ட சமூக அமைப்புகள் என்று தனக்கே ஒரு தனித்தன்மையுடன் விளங்கும் ஊர்தான் கீழக்கரை. கீழக்கரை இன்றைய நவீன யுகத்தின் பழமை மாறாத  ஒரு முத்திரை என்றால் அது மிகையாகாது.

இந்த நகரின் பிரதான சாலையாக செத்தும் கொடை கொடுத்தார் என்று உலகப்புகழ் பெற்ற வள்ளல் சீதக்காதி பெயரில் இருக்கும் வள்ளல் சீதக்காதி சாலை, இச்சாலை பல சரித்திர நிகழ்வுகளுக்கும், இளைஞர்களின் பல கனவுகளை அசை போடும் பாடக சாலையாகவும், ஊர் பெரியோர்களின் அன்றாட நிகழ்வுகளை அசைபோடும் நினைவு சாலையாக இருந்து வரும் இடமாகும்.

கடற்கரையில் இருந்த சூப் கடை தொடங்கி, கீழக்கரையின் அடையாளமான “ராவியத் ஸ்வீட்ஸ்”, வெளிநாட்டு உணவுகளை கீழக்கரை மக்களுக்கு அறிமுகப்படுத்திய பல்வேறு துரித உணவகங்கள், பழமைக்கு அடையாளமாக விளங்கும் குத்பா பள்ளியை கடந்து சென்றால் அந்த காலம் முதல் இன்று வரைஅனைவரையும் கவரும் லெப்பை கடை, ஓட்டக்கடிகாரம் என கீழக்கரை சாலைகளை விவரித்து கொண்டே இருக்கலாம்.

ஆனால் கொரோனா வைரஸ் இந்த செழுமையை முடங்க வைத்து இன்று வள்ளல் சீதக்காதி சாலை அதன் பொலிவிழந்து கிடக்கிறது.  இன்னும் புனித மாதமான ரமலான் வர சில நாட்களே உள்ள நிலையில், ரமலான் மாதங்களில் மாலையில் தொடங்கி அதிகாலை வரை ஆராவரத்துடன் இருக்கும் இச்சாலை இந்த வருடமும் அதே பொலிவுடன் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனும், பிரார்த்தனையுடனிம் கீழக்கரை மக்கள்.. நம்பிக்கை தான் வாழ்க்கை… நிச்சயம் மக்களின் ஊக்கம் நிஜமாகும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!