Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உதுமானிய பேரரசு -12

( கி.பி 1299-1922)

பேரரசர் முராத் பொறுமையாக நடந்துவந்த போது திடீரென செர்பிய வீரன் ஒருவன் வாளால் பலமாக மன்னரை தலையில் அடித்தான்.

சாதாரண உடையில் இருந்த மன்னர் கடுமையான அடியால் உடனடியாக மயக்கமுற்றார். மன்னர் முராத்தை மாளிகைக்கு எடுத்து சென்று மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது.

செர்பிய வீரனை கைதுசெய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

நீதிமன்றத்தில் செர்பிய வீரன் தனது நாடு தொடர்ந்து தோற்று வருவதாலும், உஸ்மானிய பேரரசின் விரிவாக்கமும் பிடிக்காததால்,

மன்னரை கொலை செய்தால் உஸ்மானிய அரசை வீழ்த்தி விடலாம் என்று எண்ணி மன்னரை கொலை செய்ய முயற்சித்ததாக கூறினான்.

தலைமை நீதிபதியாக அமர்ந்திருந்த உஸ்தாத் அஹமது அவர்கள் எங்கள் இஸ்லாம் மார்க்கம் குற்றத்தை ஒப்புக்கொண்டு தவறுக்காக வருந்தி மனம் மாறினால் குற்றவாளிகளை மன்னிக்கச் சொல்கிறது.

போர்க்கைதியான உங்களுக்கு தன் கையாலேயே உணவு,உடை , மருந்துகளை வழங்கிய மன்னரை கொல்ல முயற்சித்தது நியாயமா?என அவனிடம் நீதிபதி கேட்டார்.

நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில் மன்னர் முராத் தன்னை தாக்கியவனை தான் மன்னித்து விட்டதாகவும், ஆகவே நீதிமன்றமும் அவனுக்கு தண்டனை தராமல் அவனை மன்னித்து விட பரிந்துரை செய்து இருந்தார்.

மன்னரின் அந்த கடிதத்தை படித்த நீதிபதியின் கண்களிலும் மன்னரின் கருணையை நினைத்து கண்ணீர் வழிந்தது.

மன்னரின் கடிதத்தை நீதிமன்றத்தில் நீதிபதி வாசித்தபோது, அந்த செர்பிய வீரர் தேம்பி தேம்பி அழுதார்.

ஒரு குற்றவாளியை மன்னிக்கிற அளவு மனதை பண்படுத்தி இருக்கிற இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்து ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய நினைக்கிறேன்.

நீதிமன்றமும் என்னை மன்னித்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கவேண்டும் என்று விண்ணப்பிக்க நீதிபதி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அவர் உடனடியாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்து ஐரோப்பா முழுவதும் மார்க்க பிரச்சாரகராக பணியாற்றினார்.

சில நாட்கள் மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் பயனளிக்காமல் பேரரசர் முராத் மரணமடைந்தார்.

இளவரசர் பயாசித் கி.பி 1381 ஆம்ஆண்டில் உடனடியாக மன்னராக பதவியேற்றார்.

பயாசித்தின் தம்பி யாகூப் சலபி பயாசித்தைவிட அறிவாளியாகவும், வீரராகவும் திகழ்ந்தாலும் மூத்தவர் என்ற அடிப்படையில் பயாசித் இளவரசராக பதவியேற்று பிறகு மன்னரானார்.

யாகூப் சலபியும் மன்னராக வரவேண்டும் என்று சதிகளை ஆரம்பித்தார்.

மன்னர் பயாசித் அவர்களின் காதுகளுக்கு இந்த செய்தி எட்டியது. உடனடியாக மார்க்க அறிஞர்களை ஒன்று கூட்டி இதற்கு மார்க்க தீர்ப்பை கோரினார்.

குழப்பங்களுக்கு மரணதண்டனை தான் என்று கூறிய மார்க்க அறிஞர்கள் கூற்றுப்படி, அரசில் குழப்பங்களை ஏற்படுத்தியதால் யூசுப் சலபிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

கராமானிலிருந்து அலாவுதீன் மீண்டும் படையெடுத்து வந்தார். அவரை ஓட ஓட விரட்டினார் மன்னர் பயாசித்.

பயாசித் அவர்களின் ஆட்சி சிறப்பாக இருந்தது. அமைதியான சூழலால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

ஐரோப்பிய அரசர்கள் மீண்டும் சிலுவை யுத்தங்களை ஆரம்பித்தனர். இருப்பினும் உஸ்மானிய படைகள் அவர்களை அடித்து துவம்சம் செய்தன. உஸ்மானியர்களின் வெற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது.

முதல் முறையாக உஸ்மானிய பேரரசிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com