Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -2

(கி.பி 1299-1922)

அந்த அழகியபெண், சூஃபி ஞானி அதப்பாலி அவர்களின் மகள் என்று கவிஞர் அஹ்மது சொன்னபோது, அந்த அழகிய இளைஞர் உஸ்மான் ஆச்சரியப்பட்டு போனார்.

அந்தப் பேரழகிதான் அன்றைய உலக அழகி மல்காத்தூன் என்பதையறிந்த உஸ்மான் அவர்கள், சூஃபி ஞானி அதப்பாலியிடம், அவரது மகளை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டார்.

உஸ்மான் அவர்கள் செல்ஜூக்கியர்கள் இடமிருந்து சில பிரதேசங்களை பரிசாக பெற்று அதன் தலைவராக இருந்தார்.

உஸ்மான் அவர்களுக்கும் சூஃபி ஞானி அதப்பாலி அவர்களின் மகள் மல்காத்தூனுக்கும் மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

செல்ஜூக்கிய பிரதேசத்தின் கவர்னராக இருந்தாலும், ஆடம்பரமே இல்லாமல் மிக எளிமையாக உஸ்மான் இருந்தார்.

அவரிடம் ஒரு வாளும்,ஒரு கேடயமும், படுக்கை, தலையணை, சில உடைகள் என மிகக்குறைந்த பொருள்களே அவருக்கான சொத்தாக இருந்தது.

அவருக்கு போரில் கிடைத்த பொருள்களை ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்தார்.

அவரது திருமணம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

சூஃபி ஞானியின் சீடர்களாக இருந்த பலரும், உஸ்மான் அவர்களை ஆதரித்தனர்.

அதனால் அவரின் செல்வாக்கு பெருகியது. அவரின் எளிமையும், மக்களோடு இருந்த நெருக்கமும் அவருக்கு புகழை தேடித் தந்தன.

மிகுந்த இறைபக்தியும், சிறந்த தலைவராகவும், மிகச்சிறந்த வீரராகவும் உஸ்மான் அவர்கள் திகழ்ந்தார்.

செல்ஜூக்கியர்கள் போர் என்றாலே உஸ்மானின் படைகளையே அழைத்தனர்.

உஸ்மான் அவர்களின் படை வந்தாலே வெற்றிதான் என்ற சூழல் உருவானது.

மக்கள் உஸ்மானின் வீரர்களை மிகவும் நேசித்தனர். ஒழுக்கம் மிக்கவர்களாகவும் கட்டுபாடுடையவர் களாகவும் விளங்கினர்.

ஒருநாள் உஸ்மான் அவர்கள் ஆச்சரியமான கனவொன்றை கண்டார்.

சூஃபி ஞானி அதப்பாலி அவர்களின் மார்பிலிருந்து வெளிப்படுகிற இளம்பிறை வானம் நோக்கி சென்று,

முழுநிலவாக மாறி அதிலிருந்து ஒருமரம்‌ உருவாகி அதிலிருந்து உதிரும் இலைகள் பூமியில் விழுகிறது.

அவை போர் ஆயுதங்களாக மாறி துருக்கியை நோக்கி நகர்கிறது.

என்று தான்கண்ட கனவை சூஃபி ஞானி அதப்பாலி அவர்களிடம் உஸ்மான் அவர்கள் கூற,

தனது மகளை மணந்து கொண்டு துருக்கியை நோக்கி படை நடத்தி துருக்கியில் ஒரு பெரும் பேரரசை நிறுவுவாய் என முன்பே சரியாக அதப்பாலி கூறியிருந்தார்.

செல்ஜூக்கிய அரசு துருக்கி பகுதியிலிருந்து ஈரான், ஈராக் என பல பகுதிகளில் பரவி இருந்தது.

மங்கோலியர்களின் படை ஒன்று செல்ஜுக்கிய தலைநகரில் நுழைந்து மன்னரைக் கொன்றது.

செய்தியறிந்த உஸ்மானின் படை மங்கோலிய படைகளை சுற்றி வளைத்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!