கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 85ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும். விளையாட்டு விழா..

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியின் 85வது ஆண்டு நிறைவு விழா மற்றும் விளையாட்டு விழா இன்று (23/12/2017) பள்ளி வளாகத்தில் மாலை 3.30 மணி முதல் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு உஸ்வத்துல் ஹஸனா சங்க தலைவர் முஹம்மநு யூசுஃப் முன்னிலை வகித்தார். உஸ்வத்துல் ஹஸனா சங்க உப தலைவர் ஹசன் அலி தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். உஸ்வத்துல் ஹஸனா சங்க உறுப்பினர் அஹமது காமில் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். உஸ்வத்துல் ஹஸனா சங்க உறுப்பினர் சதக் அப்துல் காதர் பள்ளிக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி உதவி தொடக்கப்பள்ளி அலுவலர் வாசுகி மற்றும் கூடுதல் உதவி தொடக்கப்பள்ளி அலுவலர் தங்க கனிமொழி ஆகியோர் வாழ்ந்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ள மாணவ, மாணவிகள் அணிவகுப்பு, விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை ஹமீது நிஷா, பள்ளியின் தாளாளர் சதக் இஸ்மாயில் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.