
கீழக்கரையில் நேற்று (25-01-2017) அன்று கிழக்கு தெரு ஹைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் ரூபல்லா மற்றும் மீசல்ஸ் ( RUBELLA- MEASLES) தடுப்பூசி சம்பந்தமான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் (விழிப்புணர்வு கூட்டம்) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 300கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்நிகழ்ச்சயில் சிறப்பு விருந்தினர்களாக அரசு ஆரம்ப நிலை சுகாதார மருத்துவர். அ. மோபியா மற்றும் கிராம சுகாதார செவிலியர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவம், எவ்வாறு தடுப்பூசி அம்மையில் இருந்து காக்க உதவும் என்பதையும் மற்றும் அவசியத்தினை பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு விளக்கினர். மேலும் கீழக்கரையில் உள்ள சுற்றுபுற சுகாதாரத்தைப் பற்றியும் விவாதித்தார்கள்.
இந்நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் S.M ஜவஹர் மற்றும் முன்னாள் தாளாளர் M.M.S செய்யது இபுராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளயின் தலைமை ஆசிரியர் G.சுரேஷ்குமார், ஜமா அத் உப பொருளாளர். முகம்மது அஜிகர், உதவி தலைமை ஆசிரியை M.ச்சிகலா, உதவி ஆசிரியர்கள் S.இபுராஹிம்சா, S.R.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
You must be logged in to post a comment.