இனி வாகனம் நிறுத்தும் இடத்தை சுலபமாக கண்டறிய புதிய அம்சங்கள் அடங்கிய கூகிள் மேப் (Google Map) கை கொடுக்கும்

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களிலும் விடுமுறை மற்றும் விஷேச காலங்களில் ஏற்படும் கூட்டத்தை சமாளிக்க மிகப்பெரிய அளவில் வாகன நிறுத்தும் இடங்களை (Parking lots) வாடிக்கையாளர்களின் வசதிக்காக வணிக அங்காடிகள் (Shopping Mall) அமைத்து இருப்பதை நம்மால் காண முடிகிறது.

இருந்த போதிலும், வாகனங்களை நிறுத்த பார்க்கிங் (Parking) தேடி அலைவது போல் பல மணி நேரம் செலவு செய்து வாகனம் நிறுத்தப்பட்ட இடங்களை கண்டறியவும் அலைய வேண்டிய சூழல் உருவாகி விட்டது. ஏனென்றால்,வாகனங்கள் ஒரே மாதிரியாக இருப்பதாலும், மிகப்பெரிய பரப்பளவில் வாகன நிறுத்தும் இடம் அமைந்திருப்பதாலும் வாகனங்களை கண்டறிய மக்கள் சிரமப்படுகிறார்கள்.

இது போன்ற சிரமத்தில் இருந்து விடை பெற கூகிள் மேப் (Google Map) நிறுவனம் பீட்டா வெர்சனில் (Beta Version) புதிய அம்சங்களை இணைத்துள்ளது. கூகிள் மேப் செயலியை (Google Map App) பயன்படுத்துவதன் மூலம் வாகனம் நிறுத்தும் இடத்தை (Parking zone) பதிவு செய்யும் போது புகைப்படம், அருகில் உள்ள பகுதிகள் மற்றும் நேர நினைவூட்டல் போன்ற கூடுதல் தகவலையும் குறித்து வைத்து கொள்ள முடியும்.

இதன் மூலம் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தை எளிதில் அறிந்த கொள்ள கூக்கிள் மேப் செயலி உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கூகிள் மேப்பின் புதிய அம்சங்களை ஆன்ட்ராய்டு செயலி (Android) மூலம் பயன் பெற முடியும். ஆனால் IOS 10 பயன்படுத்துவோர் புளூ டூத் மூலம் சேவைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.