ஏர்வாடியில் சுறுசுறுப்பாக நடைபெறும் சுகாதாரப் பணிகள்…

கீழக்கரை ஏர்வாடியில் தினமும் பல்லாயிரகணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சுகாரப் பணிகள் மேற்கொள்வது என்பது மிகவும் சவாலான விசயமாகும்.

தற்சமயம் பரவி வரும் டெங்கு காய்ச்சல், கிருமி காய்ச்சல் மற்றும் பல வகையான தொற்று நோய்களைத் தடுக்கும் விதமாக, இன்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொசு மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், குடிநீருக்கு க்ளோரின் சேர்த்தல், ஆங்காங்கே பரவி கிடந்த குப்பைகளை அகற்றுதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவ ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் கடலாடி ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் மணிமேகலை,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார், ஊராட்சி செயலாளர் அஜ்மல்கான் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகள் சில நாட்களில் நடக்கும் சிறப்பு பணியாக நிறுத்தி விடாமல் அன்றாடம் மேற்கொண்டால் மக்கள் சுகாதாரத்துடன் வாழ முடியும் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..