மீண்டும் பாஜக வெற்றிபெற்றால் இனி தேர்தலே நடக்காது இது தான் கடைசி தேர்தலாஇருக்கும் – தூத்துக்குடியில் கனிமொழி பேச்சு..

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது . கூட்டத்திற்க்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளார் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கனிமொழி பேசுகையில் தூத்துக்குடியில் போட்டியிடும் எனக்கு உங்கள் அன்பான ஆதரவை அளிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்  தூத்துக்குடியில் திமுக வெற்றி பெருவது உறுதி , பாஜகவினர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காக எதையும் செய்வார்கள் கோவில்களில் அதிகளவு கும்பாபிஷேகம்செய்தது திமுக ஆட்சி காலத்தில் தான்  மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் பாஜகவினர் பிரச்சினைகளைஉருவாக்கி கொண்டு இருக்கின்றனர் பாஜக மீண்டும் வர வாய்ப்பில்லை ஒருவேளை மீண்டும்  வெற்றி பெற்றால் இது தான் கடைசி தேர்தலாக இருக்கும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை கொலை செய்தது அதிமுக அரசு கொலைசெய்ய சொன்னது பாஜக அரசு  தூத்துக்குடி மாவட்டத்தில் முடக்கப்பட்ட உணவு பொருள் பூங்கா திட்டம் திமுக ஆட்சி அமைத்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும் தூத்துக்குடி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவேன் என்று கூறினார் . கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன், காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏபிசி சண்முகம், காங்கிரஸ்   மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன்மா.கம்யூ மாவட்ட செயலாளர் அர்ச்சுணன்,இ.கம்யூ மாவட்ட செயலாளர் அழகு முத்துப்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், வடக்கு மாவட்டச்செயலாளர் கதிரேசன்,இ.யூ.மூஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மனித நேய ஜனநாயக கட்சி பாராளுமன்ற பொறுப்பாளர் உசேன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செண்பகராஜ், ஆதித் தமிழர் கட்சி வினோத் மாவட்ட செயலளர் சங்கர் உட்பட தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள்  தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் .