துபாய் வீதியில் உலா வர தயாராக தானியங்கி கண்காணிப்பு வாகனம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் என்றாலே எல்லா தளத்திலும் முன்னோடி என்பதை பல கட்டங்களில் நிருபித்து வருகிறார்கள்.  அதன் வரிசையில் துபாயில் பல அறிவார்ந்த செயல்பாடுகள் (SMART SERVICES)  இணையதளம் வாயிலாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே இணையதளம் மூலன் எளிதாக பல சேவைகளை பெற முடியும்.

இதன் வரிசையில் துபாயில்  காவல் துறை கண்கானிப்பு பணிகளிலும் அறிவார்ந்த செயல்பாடுகள் (SMART SERVICES) நடைமுறைக்கு வர உள்ளது. அதில் முக்கியமான செயல்பாடு ஆள் இல்லாத கண்காணிப்பு வாகனம். இதன் மூலம் 24 மணி நேரமும் இணையதள மூலமாக காவல்துறை கட்டுப்பாட்டுடன் ஆள் இல்லாமல் துபாயின் விதிகளை கண்காணிக்க முடியும். இதற்காக பிரத்யேகமாக சிறிய ரக கார் வடிவிலான ஆள் இல்லா  கண்காணிப்பு வாகனம், நவீன தொழில் நுட்பம் கொண்ட கேமாராக்கள் மற்றும் சென்சார்கள்  பொருத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள  ஆள் இல்லா சிறிய வகை விமானம் (Air Drone) இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயரமாக பறந்தும், மறைமுகமான செயல்பாடுகளையும் படம் பிடித்து காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு அனுப்பும் திறன் கொண்டது. மேலும் சாலைகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் பொருட்கள் மற்றும் வாகனங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்கும் திறன் உடையது.

இது போன்ற அதிநீவீன திட்டம் மூலம் குற்றங்களை உடனே கண்டறியவும், விபத்துகள் நேரத்தில் துரித நடவடிக்கை எடுக்கவும் வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.