Home செய்திகள் சென்ட்ரல் இராம்நாடு ஹோமர் கிளப் சார்பில் புறா பந்தயம் – சாம்பியன்களுக்கு பரிசு..

சென்ட்ரல் இராம்நாடு ஹோமர் கிளப் சார்பில் புறா பந்தயம் – சாம்பியன்களுக்கு பரிசு..

by ஆசிரியர்

சென்ட்ரல் இராம் நாடு ஹோமர் கிளப் சார்பில் இரண்டாம் ஆண்டு புறா பந்தயம் ஜனவரி 3, 27, பிப்ரவரி 10, 24, மார்ச் 25 ஆகிய தேதிகளில் நடந்தது.  குறைந்த தூர (சார்ட் சாம்பியன்) பந்தயத்தில் அச்சுந்தன்வயல் ரவி, நீண்ட தூர (லாங் சாம்பியன்) பந்தயத்தில் கே.முனியசாமி புறாக்கள் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றன.

கடந்த 27.01.2019 ல் நடைபெற்ற விழுப்புரம் முதல் இராமநாதபுரம் 295 கிமீ., தூர புறா பந்தயத்தில் எம்.சந்திரன் என்பவரது புறா 4 மணி நேரம் 36 நிமிடம் 43 விநாடியில் கடந்து முதல் பரிசை தட்டிச் சென்றது. இராமநாதபுரம் நிஜந்தா கண்ணன் என்பவரது புறா 4 மணி நேரம் 39 நிமிடம் 43 விநாடியில் கடந்து இரண்டாம் பரிசு பெற்றது.

இராமநாதபுரம் ராஜா என்பவரது புறா 4 மணி நேரம் 41 நிமிடம் 44 விநாடியில் கடந்து மூன்றாம் பரிசு பெற்றது. நான்காம் பரிசு ராஜா, ஐந்தாம் பரிசு அருள்தாஸ், ஆறாம் பரிசு தமீம் சுல்தான் புறாக்களுக்கு கிடைத்தன. சாதனை புறாக்களின் உரிமையாளர்களுக்கு ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி பரிசு வழங்கி பாராட்டினார்.

கடந்த 03.01.2019ல் நடந்த தாம்பரம் முதல் இராமநாதபுரம் 438 கிமீ., தூர புறா பந்தயத்தில் ராமநாதபுரம் நிஜந்தா கண்ணன் என்பவரது புறா 5 மணி நேரம் 17 நிமிடம் 39 விநாடியில் கடந்து முதல் பரிசை தட்டிச் சென்றது. இராமநாதபுரம் ராஜா என்பவரது புறா 5 மணி நேரம் 18 நிமிடம் 11 விநாடியில் கடந்து இரண்டாம் பரிசு பெற்றது. இராமநாதபுரம் நிஜந்தா கண்ணன் என்பவரது புறா 5 மணி நேரம் 18 நிமிடம் 35 விநாடியில் கடந்து மூன்றாம் பரிசு பெற்றது. நான்காம் பரிசு ராஜா, ஐந்தாம் பரிசு எம்.பாலமுருகன், ஆறாம் பரிசு நிஜந்தா கண்ணன், ஏழாம் பரிசு ரவி புறாக்களுக்கு கிடைத்தன. புறாக்களின் உரிமையாளர்களுக்கு சென்னை ஆர்.ஆர்.பிரசாத் பரிசு வழங்கி கவுரவித்தார்.

10.02.2019 ல் நடைபெற்ற ஆந்திர மாநிலம் நெல்லூர் முதல் இராமநாதபுரம் வரை 580 கி.மீ., தூர பந்தயத்தில் இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் ரவி என்பவரது புறா 9 மணி நேரம் 18 நிமிடம் 1 நொடியில் கடந்து முதல் பரிசு, வென்றது.  இரண்டாம், மூன்றாம் பரிசுகளை அச்சுந்தன்வயல் ரவி புறாக்களே தட்டிச் சென்றன.  நான்காம் பரிசு முனியசாமி, ஐந்தாம் பரிசு ரவி, ஆறாம் பரிசு எம்.பாலமுருகன், ஏழாவது பரிசு பி.ஜெகதீசன், எட்டாவது பரிசு பி.ரவி புறாக்களுக்கு கிடைத்தன.

புறாக்களின் உரிமையாளர்களுக்கு ராமேஸ்வரம் ஜனனி முருகன் பரிசு வழங்கினார்.

24.02.2019 இல் SIRPS சார்பில் நடந்த 500 கி.மீ., தூர நாயுடு பேட்டை புறா பந்தயத்தில் கீழக்கரை கண்ணன் என்பவரது புறா 8 மணி நேரம் 40 நிமிடம் 05 விநாடியில் கடந்து முதல் பரிசு வென்றது.  இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் ரவி என்பவரது புறா 9 மணி நேரம் 40 நிமிடம் O2 நொடியில் கடந்து இரண்டாம் பரிசு, வென்றது.

இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் எம்.பாலமுருகன் என்பவரது புறா 14 மணி நேரம் 30 நிமிடம் 36 நொடியில் கடந்து மூன்றாம் பரிசு, வென்றது. நான்காம் பரிசும் எம்.பாலமுருகன் புறாவுக்கு கிடைத்தது. புறாக்களின் உரிமையாளர்களுக்கு திருச்சி ஜெகதீசன் பரிசு வழங்கினார்.

25.3.2019 இல்  SIRPS சார்பில் நடந்த 1000 கி.மீ., தூர நாயுடு பேட்டை புறா பந்தயத்தில் ரெகுநாதபுரம் கே.முனியசாமி என்பவரது புறா 30 மணி நேரம் 06 நிமிடத்தில் கடந்து முதல் பரிசு வென்றது. இரண்டாம் பரிசையும் ரெகுநாதபுரம் கே.முனியசாமி புறா 74 மணி நேரம் 23 நிமிடத்தில் கடந்து வென்றது. மதுரை வில்பிரட் பரிசு வழங்கினார். சென்ட்ரல் ராம்நாடு ஹோமர் கிளப் நிறுவனத்தலை வர் எம்.ஆனந்தமோகன், செயலாளர் பி.ஜெகதீசன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பந்தய ஏற்பாடுகளை செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!