Home செய்திகள் நிலக்கோட்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம். ..

நிலக்கோட்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம். ..

by ஆசிரியர்

தமிழகத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேச்சு. நிலக்கோட்டை பிப்ரவரி 6. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக ஊராட்சி செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வத்தலகுண்டு செயலாளர் முருகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் மாயாண்டி வரவேற்று பேசினார்.

அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசியதாவது : பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது இந்தத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. இதற்காக கட்சித் தொண்டர்கள் பகல் பாராமல் உறுதியுடன் இருந்து கட்சிப் பணியாற்றி வேண்டுகோள் விடுத்தார். இத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் நமது கட்சி நிர்வாகிகளுடன் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை பெரிதாகி சம்பளத்தையும் ஒற்றுமையை சீர்குலைக்க வாய்ப்புள்ளது. எனவே கட்சி தொண்டர்கள் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு முழுமூச்சாக பாடுபடவேண்டும் என்றார். இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் பிரிவு துணைச் செயலாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் கழக செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!