Home செய்திகள் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உபகரணங்கள்; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்..

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உபகரணங்கள்; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 11.09.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3-மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.25,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட துரை. இரவிச்சந்திரன் வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 337 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) ஷேக், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, உதவி மக்கள் தொடர்பு தொடர்பு அலுவலர் ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!