Home செய்திகள் கலாச்சாரம் ‌‌& பாரம்பரிய மருத்துவ கவுன்சிலிங் & நுகர்வோர் & மக்கள் பாதுகாப்பு இயக்கம் துவக்க விழா…

கலாச்சாரம் ‌‌& பாரம்பரிய மருத்துவ கவுன்சிலிங் & நுகர்வோர் & மக்கள் பாதுகாப்பு இயக்கம் துவக்க விழா…

by ஆசிரியர்

கலாச்சாரம் ‌‌& பாரம்பரிய மருத்துவ கவுன்சிலிங் & நுகர்வோர் & மக்கள் பாதுகாப்பு இயக்கம் துவக்க விழா “இயற்கையை காப்போம் – பாரம்பரியத்தை மீட்போம்” எனும் குறிக்கோளுடன் சென்னையில் உலக பல்கலைக்கழக சேவை மையத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் அகில உலக அளவிலும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாப்பது மேம்படுத்துவது போன்ற விசயங்கள் பற்றி அலசப்பட்டது.

இத்துவக்க விழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக தலைமை Dr.M. அப்துல் ரகுமான் Ex.MP முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இந்திய முஸ்லீம் லீக்,  தமிழ்நாடு துளாவூர் ஆதினம் ஞானப்பிரகாச தேசிகர்,  சேர்மன் CTMC. SP. சங்கரன்,  சேர்மன் CHPO. C.ஜெயமுருகன்,  MD. செல்வராஜ் P.பீட்டர் சாலமன்,  S.சபீர் அப்துல்லா,  Sஅன்சார் ராஜா,  திருநாவுக்கரசு,  கராத்தே ரவி,  இளையராஜா, மருதராஜன் , அப்துல் லத்தீப்  தாமரைச்செல்வன்,  மைக்கேல்ராஜ்,  மோகனசுந்தரம்,  கே எஸ்.லட்சுமணன்,  காமேஷ்வரி,  ஆர். ராஜேந்திரன்,  A.விஜயா,  Pஅன்பு ராஜாராம்,  R.J.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவ கவுன்சில் பற்றிய முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த கலையின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்தவும், சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவது,  இதன் முக்கியத்துவம் இன்றைய சூழ்நிலையில் உலகில் சூழ்நிலைக்கும் கலாச்சாரத்திற்கும் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஏற்றவை என வழிகாட்டும் விழிப்புணர்வை உருவாக்கவும்,  இந்த கவுன்சில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இன்னல் நிறைந்த இன்றைய மனித வாழ்வியல் இயற்கை நிறைந்த இன்பமயமான வாழ்க்கையாக மாறும்.  இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கவுன்சிலிங் மூலமாக 10 கோடி நபர்களிடம் இயற்கையை காப்போம் பாரம்பரியத்தை மீட்போம் என்ற உறுதிமொழி ஏற்பு கையெழுத்து இயக்கமும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவ கவுன்சிலிங் மூலம் பாரம்பரிய மருத்துவம் கலைகளை மீட்டெடுப்பதற்காக அகில இந்திய அளவில் பாரம்பரிய மாற்று மருத்துவர்களை ஒருங்கிணைத்து அகில உலக அளவில் இக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு என்பது நுகர்வோர் கலாச்சாரமாக மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் நுகர்வோருக்கான உரிமைகள் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும்ம, மேலும் நுகர்வோருக்கான அதிகாரம் மற்றும் உரிமைகளை நிலைநாட்டவும் அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ள நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் நுகர்வோர் மற்றும் பார்வையாளர்களுக்கு வரும் வாழ்வியல் பிரச்சினைகளை தீர்க்கும் பாலமாகவும், நுகர்வோர் உரிமைகளையும் அதிகாரிகளை அதிகாரத்தையும் இணைக்கும் பாலமாக சமுதாயப் பிரச்சனைகளை சட்டரீதியாகவும், சமூக அநீதி ஆகும் தீர்வு ஏற்படுத்தவும், மக்களுக்காக வாழ்வியல் திறன் மேம்படுத்தவும் தொடர்ந்து பாடுபடும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பெரும் திரளாக வந்த சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகாசனம், நாட்டு மருத்துவர்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்படைய செய்தமைக்கு வேலூர் மாவட்ட பொறுப்பாளர் RJ. சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

தகவல்:- சுரேஷ்குமார், வேலூர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!