தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் நியாய விலை கடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயிலில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் நியாய விலை கடை சார்பில் மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்க கூட்டுறவு சங்க நிர்வாக இரு உறுப்பினர்கள் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இத் தேர்தல் நடக்கும் போது கூட்டுறவு சங்க பணியாளர்களை ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று அனைவராலும் பணியாளர்களை தாக்கப்படுவதும், தரக்குறைவான வார்த்தைகளால் பேசப்படுவதையும் அலுவலகத்தில் வைத்து பூட்டப்படுவதை தேர்தல் அலுவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும் அரசியல் கட்சியினரின் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் அதன் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆண்கள் பெண்கள் 480பேர்கள் கலந்து கொண்டனர். இதனால் நியாய விலை கடை செயல்படவில்லை, இந்த அச்சுறுத்தல் தொடரும்மானால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்Lம் மாவட்ட தலைவர் முத்துராமலங்கம் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் இராமசாமி முன்னிலையிலும் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மாவட்ட துணை தலைவர்கள் சேரன் கணேசன், மாவட்ட இணை செயலாளர்கள் குஞ்சர பாண்டியன், சாமி பாண்டி, செய்தி தொடர்பாளர் பொற் செல்வன் கலந்து கொண்டனர்.