மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக கீழக்கரையை சேர்ந்தவர் நியமனம்….

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்லதுரை அப்துல்லா பொறுப்பேற்றதை அடுத்து மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக, கீழக்கரை நகர காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்  அமீது கான்Ex Mc நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்லதுரை அப்துல்லா நியமன கடிதத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீழக்கரை எழுத்தாளர் மஹ்மூது நெய்னா தனது நூல்களை மாவட்டத் தலைவருக்கு வழங்கி, சால்வை அணிவித்துத்தார் மேலும் இந்த நிகழ்வில் கீழக்கரை சீனி முஹம்மது, சாயல்குடி வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..