கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக கல்வி உதவித் திட்டம் 2021 அறிவிப்பு..

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய கல்வி சங்கம் ஏழை எளிய மாணவர்களின் கல்வி பணப்பற்றாக் குறையினால் தடை படக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் ஒரு சிறிய முயற்சியாக பல கல்வி உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த கல்வியாண்டு முதல் பல கல்வி நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்களின் மூலம் தேவையுடைய மாணவ, மாணவிகளுக்கு இலவச சேர்க்கையும் செயல்படுத்தி வருகிறது.

இந்த வருடம் கீழ்கண்ட படிப்புகளுக்கு உதவித் திட்டம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

1. AIE Pre Matric Educational scheme (பள்ளி கல்வி உதவி திட்டம்) 2 AIE Higher Educational scheme (உயர் கல்வி உதவி திட்டம்) 3. AIE Polytechnic Educational scheme (தொழில்நுட்ப கல்வி உதவி திட்டம்) 4.AIE Professional Educational scheme (தொழில்முறை கல்வி உதவி திட்டம்)

இவ்வருடமும் கல்வி உதவி வழங்கப்பட உள்ளது. தேவையுடைய மாணவர்கள் இவ்வாண்டிற்கான விண்ணப்பப் படிவத்தை சங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.07.2021.

ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உதவ விரும்புவோர் எங்களை [email protected] என்ற இமெயில் அல்லது +91- 9976346062 +91- 9790135378 +91- 9791741708 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கலாம். இது சம்பந்தமான மேல் விவரங்களுக்கு  சைஃபுல்லாஹ் – 9787833427, சுஹைல் – 8883542737 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.