Home செய்திகள் தூத்துக்குடி அருகே மாட்டுவண்டி போட்டி; கடம்பூர் காளைகள் முதலிடம்..!

தூத்துக்குடி அருகே மாட்டுவண்டி போட்டி; கடம்பூர் காளைகள் முதலிடம்..!

by ஆசிரியர்

தூத்துக்குடிஅருகே நடந்த மாட்டுவண்டி போட்டியில், கடம்பூர் மற்றும் மதுரை காளைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து, எல்லைக்கோட்டை கடந்து முதல் பரிசை தட்டிச் சென்றன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அயிரவன்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கோடை விழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என 2 பிரிவுகளாக நடந்த இதில் மொத்தம் 36 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் பங்கேற்றன. போட்டியை, அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேசன் துவக்கி வைத்தார்.

போட்டி தொடங்கியவுடன், வண்டியில் பூட்டப்பட்டிருந்த காளைகள் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன. சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பார்வையாளர்கள் கைகளைத் தட்டியும், ஆவாரம் செய்தும் மாட்டு வண்டிகளின் பூட்டப்பட்டிருந்த காளைகளையும், சாரதிகளை உற்சாகப்படுத்தினர்.

போக வர 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்தப் போட்டியில், கடம்பூர் கருணாகராஜா காளைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து எல்லைக் கோட்டை கடந்துவந்து முதலிடத்தை பிடித்தது. நெல்லை மாவட்டம் நாலந்தா உதயம் துரைப்பாண்டி காளைகள் 2வது இடத்தையும், ஓட்டப்பிடாரம் மேட்டூர் அழகர் பெருமாள் காளைகள் 3வது இடத்தையும் பிடித்தன.

தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டுவண்டி போட்டியில் 24 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போக வர 12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப் போட்டியில், மதுரை மாவட்டம் பாண்டி கோயில் பாண்டியராஜன் காளைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து எல்லைக் கோட்டைக் கடந்துவந்து  முதலிடத்தை பிடித்தது. கடம்பூர் கருணாகராஜா காளைகள் 2வது இடத்தையும், அயிரவன்பட்டி ஸ்ரீமாரியம்மன் கோயில் காளைகள் 3வது இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!