அரசு வேலைக்கு சென்ற பின் லஞ்சம் பெற மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்த IAS அகாடமி மாணவர்கள்..

அரியலூர் ராஜேஷ் IAS அகாடமி கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்று பல்வேறு துறைகளில் 300க்கும் மேற்பட்டோர் அரசு பணியில் உள்ளனர்.

இன்று இங்கு படிக்கும் அனைவரும் அரசு வேலைக்கு சென்ற பின் லஞ்சம் வங்கமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சமீபத்தில் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற ஜோதிவேல் முதல் கையொப்பம் இட்டு துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்விற்கு ராஜேஷ் IAS அகாடமி நிறுவனர் தலைமை வகித்தார். அரியலூர் அரசு கலை கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்