Home செய்திகள் பால்வெளிகள் தம் மையத்தில் பாரியக் கருந்துளைகளைக் கொண்டுள்ளன எனும் கோட்பாட்டுக்குப் பெயர்பெற்ற ஆங்கிலேய வானியற்பியலாளர் டொனால்டு இலிண்டந்பெல் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 5,1935).

பால்வெளிகள் தம் மையத்தில் பாரியக் கருந்துளைகளைக் கொண்டுள்ளன எனும் கோட்பாட்டுக்குப் பெயர்பெற்ற ஆங்கிலேய வானியற்பியலாளர் டொனால்டு இலிண்டந்பெல் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 5,1935).

by mohan

டொனால்டு இலிண்டந்பெல் (Donald Lynden-Bell) ஏப்ரல் 5,1935ல் டோவர் நகரில் பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விபெற்ற இவர், 1962ல் ஒலின் எகன், ஆலன் சாந்தகே ஆகியோருடன் இணைந்து ஆய்வுரை வழங்கியுள்ளார். இதில் நமது பால்வெளியாகிய பால்வழி ஒரு மாபெரும் வளிம முகிலின் குளைவி ஏற்பட்ட்து எனக் கூறுகிறார். 1969ல் பாரியக் கருந்துளைகளின் அகந்திரளும் பொருளால் ஆற்றல் பெறுகின்றன எனும் கோட்பாட்டை வெளியிட்டார். அழிந்த குவேசார்கலை எண்ணி, பெரும்பாலான பாரியப் பால்வெளிகள் தம் மையத்தில் கருந்துளைகளைப் பெற்றுள்ளன எனக் கோட்பாட்டியலாகக் கொணர்ந்தார். இவரது மனைவி கேம்பிரிட்ஜ் வேதியியல் பேராசிரியரான உரூத் இலிண்டன் பெல் ஆவார்.

பால்வெளிகள் தம் மையத்தில் பாரியக் கருந்துளைகளைக் கொண்டுள்ளன எனும் கோட்பாட்டுக்குப் பெயர்பெற்றவர். இந்த கருந்துளைகளே குவேசார்களுக்கு முதன்மை ஆற்றல் வாயிகள் ஆகும்.இவர் மார்ட்டன் சுகிமிடு பரிசை மற்ரவரோடு இணைந்து பெற்றுள்ளார். இவர் வானியற்பியலுக்கான காவ்லி பரிசு 2008 இல் பெற்றுள்ளார். இவர் அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்துள்ளார். அண்மையில் இவர் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்தில் பணி செய்கிறார். இவர்தான் அந்நிறுவனத்தின் முதல் இயக்குநரும் ஆவார்.

இவர் ஏழு சாமுராய் வானியலாளர் குழுவில் ஒருவர். இந்தக் குழுவின் மற்ற வானியலாளர்களில் சாந்திரா பேபர், டேவிடு பர்சுடைன், ஆலன் டிரெசியர், உரோஜர் டேவீசு, உரோபட்டோ தெர்லேவிச், காரி வேக்னர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மாபெரும் ஈர்ப்பி நிலவுகிறது என்ற எடுகோளின் ஆசிரியர்கள் ஆவர். மாபெரும் ஈர்ப்பி என்பது மிகப்பெரிய பொருள்விரவல் பகுதி ஆகும். இது 250 மில்லியன் ஒளியாண்டுகட்கு அப்பால் உள்ளது. இந்த ஈர்ப்பி தான் களப் பால்வெளிக் கொத்துகளின் இயக்கத்துக்குக் காரணமாகும். இவரது நடப்பு ஆய்வு பொது சார்பியல் கோட்பாட்டிலும் வானியற்பியல் தாரைகளிலும் முதன்மையாக கவனம் குவிக்கிறது.

எடிங்டன் பதக்கம் (1984), அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1993), அமெரிக்க வானியல் கழகத்தின் இயங்கியல்சார் வானியல் பிரிவின் புரோவுவர் விருது (1991), கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (1983), தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் அறிவியல் வளர்ச்சிக்கான ஜான் ஜே, கார்ட்டி விருது (2000), புரூசு பதக்கம் (1998), என்றி நோரிசு இரசல் விரிவுரைத்தகைமை (2000), வானியற்பியலுக்கான காவ்லி பரிசு (2008) போன்ற பதக்கங்களை பெற்றுள்ளார். குறுங்கோள் 18235க்கு இலிண்டன்-பெல் என இவரது பெயர் இடப்பட்டுள்ளது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com