Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நெல்லையில் ரூ. 2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

நெல்லையில் ரூ. 2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

by ஆசிரியர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை ஜன.05 அன்று திறந்து வைத்தார். பொருட்காட்சி திடல் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, பார்வையிட்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருநெல்வேலி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை திறந்து வைத்தார். நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் தளத்தின் பரப்பளவு 1230 ச.மீ, தரைத்தளம் 404 ச.மீ, மதல் தளம் 48 ச.மீ மற்றும் மொத்த கட்டுமான பகுதி 452 சதுர மீட்டர் ஆகும். இதில் கணினிகள், ஸ்மார்ட் பேனல் காட்சி, புத்தகங்கள், இருக்கை ஏற்பாடு, சி.சி.டி.வி கேமரா, 40″ டிஸ்ப்ளேக்கான எல்.இ.டி டிவி, 29″ டிஸ்ப்ளேக்கான எல்.இ.டி டிவி போன்ற வசதிகள் அமைய பெற்றுள்ளது.

இம்மையமானது, திறன் மேம்பாடு மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் மற்றும் நான் முதல்வன் திட்டங்கள் மூலம் இளைஞர்களின் வாழ்க்கையை வளப்படுத்துதல், நகரத்தில் உள்ள அனைத்து வருமானம் மற்றும் சமூக குழுக்களுக்கான படிப்புப் பொருள் மற்றும் பயிற்சிக்கான அணுகலை உறுதி செய்தல், பயிற்சி வகுப்புகள் மற்றும் பிற தொடர்புடைய செயல்பாடுகளுக்காக உருவாக்குதல், இளைஞர்கள் தேர்வுக்குத் தயாராகக்கூடிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், ஆன்லைன் ஆதாரங்களில் இருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள மின் நூலக உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களுடன் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுசார் மையத்தில் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில், மாநகர பொறியாளர் குமரேசன், இளநிலை பொறியாளர் ரமேஷ், உதவி நிர்வாக பொறியாளர் பேரின்பம் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்-அபுபக்கர் சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!