Home செய்திகள்உலக செய்திகள் நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்த எட்வார்டு சார்லசு பிக்கரிங் பிறந்த தினம் இன்று (ஜுலை 19, 1846).

நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்த எட்வார்டு சார்லசு பிக்கரிங் பிறந்த தினம் இன்று (ஜுலை 19, 1846).

by mohan

எட்வார்டு சார்லசு பிக்கரிங் (Edward Charles Pickering) ஜுலை 19, 1846ல் மசச்சூசெட்சில் பிறந்தார். பிக்கரிங் பொசுட்டன் இலத்தீன் பள்ளியில் படித்தார். 1865ல் ஆவார்டில் அறிவியல் இளநிலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பின்னர் பிக்கரிங் மசச்சூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியல் கற்பித்தார். பின்னர், 1877ல் ஆவார்டு கல்லூரி வானாய்வகத்தின் பணிப்பாளராகப் பொறுப்பேற்று 1919 வரை அங்கே பணிபுரிந்தார். அங்கே பணிபுரிந்த காலத்தில் ஒளிப்படங்கள் மூலம் விண்மீன் நிறமாலைகளைச் சேகரிப்பதில் பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தினார்.

ஆவார்டில் ஆன்னி ஜம்ப் கெனான், ஃஎன்றியேட்டா சுவான் லீவிட், அந்தோனியா மோரி என்பவர்கள் உள்ளிட்ட 80 பெண்களைப் பணிக்கு அமர்த்தினார். இவர்கள் ஆவார்டு கல்லூரி வானாய்வகத்தில் பல முக்கிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினர். பிக்கரிங்கினால் வெளியிடப்பட்ட, செஃபியட்டுக்கான காலமுறை மின்னொளித் தொடர்பு குறித்த லேவிட்டின் கண்டுபிடிப்பு, அண்டத் தூரங்கள் குறித்த தற்கால விளக்கங்களுக்கான அடிப்படையாக அமைந்தது. 1876ல் உருவான அப்பலாச்சியன் மலைச் சங்கத்தின் இணை நிறுவனர்களில் இவரும் ஒருவர்.

பெரிய பட்டகம் ஒன்றை ஒளிப்படத் தகட்டுக்கு முன்னே வைப்பதன் மூலம், பல விண்மீன்களின் நிறமாலைகளை ஒரே நேரத்தில் ஒளிப்படம் எடுக்கும் முறையொன்றை 1882ல், பிக்கரிங் உருவாக்கினார். இவர், வில்லியமினா பிளெமிங் என்பவருடன் சேர்ந்து, எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட நிறமாலை வகுப்புக்களுக்கான வகைப்பாட்டு முறை ஒன்றை வடிவமைத்தார். முதலில் ஆவார்டு விண்மீன் வகைப்பாடு என அறியப்பட்ட இம்முறை என்றி டிரேப்பர் விபரப்பட்டியலுக்கு அடிப்படையாக அமைந்தது.

ஆவார்டு கல்லூரி வானாய்வகம் உலகம் முழுவதிலும் அறியப்படுவதற்கும், மதிக்கப்படுவதற்கும் காரணமானவர் பிக்கரிங் ஆவார். இது இன்றும் மதிக்கப்படுகின்ற ஒரு வானாய்வகமாகவும், திட்டமாகவும் விளங்குகிறது. அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர்(1867), அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம்(1886, 1901), பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தின் வைசு பரிசு(1888), அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கம்(1888), புரூசு பதக்கம்(1908) போன்ற பதக்கங்கள் பெற்றுள்ளார்.

கார்ல் வோகல் என்பவருடன் இணைந்து பிக்கரிங், நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியச் செயல்முறைகளின் கூறுகள் (Elements of Physical Manipulations) (2 தொகுதி, 1873–76) என்னும் நூலை எழுதியுள்ளார். நிலாவில் உள்ள குழிப்பள்ளம் ஒன்று பிக்கரிங் ((நிலாக்)குழிப்பள்ளம் என வழங்கப்படுகிறது. செவ்வாயில் உள்ள குழிப்பள்ளம் ஒன்று பிக்கரிங் (செவ்வாய்க்)குழிப்பள்ளம் என வழங்கப்படுகிறது. சிறுகோள் ஒன்று 784 பிக்கரிங்கியா என வழங்கப்படுகிறது. நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்த எட்வார்டு சார்லசு பிக்கரிங் பிப்ரவரி 3, 1919ல் தனது 72வது அகவையில் மசச்சூசெட்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!