Home செய்திகள் உசிலம்பட்டி அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு சாவடி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

உசிலம்பட்டி அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு சாவடி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி தனியார் மண்டபத்தில் செல்லம்பட்டி வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டி, முன்னிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் செல்லம்பட்டி வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குச்சாவடி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் அமைப்பது குறித்தும், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் பூத்கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ராமகண்ணன், நஞ்சை புஞ்சை விவசாய சங்க தலைவர் பொன்மணிகண்டன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜய் பிரபாகரன், ஏழுமலை வட்டாரத் தலைவர் புதுராஜா, சேடப்பட்டி வட்டார தலைவர் ஜெயராஜ், உசிலம்பட்டி நகர தலைவர் மகேந்திரன், திருமங்கலம் வடக்கு வட்டாரத் தலைவர் வீரபுத்திரன், மாவட்ட விவசாய சங்க கண்காணிப்பாளர் செல்லக் கண்ணன், உட்பட காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பேசிய தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் காங்கிரஸ் கட்சி நாளடைவில் வலுவான நிலையை எட்டும் நிலையில் இருப்பதால் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் வழிவிட்டு, வரும் இளைய தலை முறைகளுக்கு வழிகாட்டியாக அமைக்க வேண்டும் மேலும் காங்கிரஸ் கட்சி வலுவான நிலையே இந்த பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால் இளைஞர் கையில் மட்டுமே உள்ளதாகவும் என சூளுரை ஆற்றினார்.

உசிலை மோகன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!