உசிலம்பட்டி பள்ளியில் அறிமுகப்படுத்திய மணி அடித்தால் தண்ணீர் பருகும் பழக்கத்தை தமிழகம் முழுவதும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை..

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பள்ளியில் 4 மணி நேரம் வரை தண்ணீர் குடிக்காமலிருப்பதால் பல வியாதிகளுக்கு ஆளாகின்றன.இதனை உணர்ந்த கேரள அரசு மணி (பெல்) அடிக்கும் போது பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை சட்டமாக்கியுள்ளது.இதே போல் தமிழகத்திலும் முதன்முறையாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு கடந்த சில திpனங்களுக்கு முன் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது பொற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்த உசிலம்பட்டி பகுதியிலுள்ள கெரன் – விகேஎஸ் பள்ளி என்ற இரு ஆங்கில பள்ளிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்தியுன்னர். நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தினால் தங்கள் குழந்தை முன்பை விட சுறுசுறுப்பாகவும் உற்சாகத்தோடும் காணப்படுவதாகவும் கருத்து தெரிவித்தனர். மேலும் இத்திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்தின் வியாதிகளின் எண்ணிக்கை பாதியளவு குறையும்.இளம் குழந்தைகளுக்கு ஆரோக்யம் மேம்படும்.

எனவே ஒரு பைசா கூட செலவில்லாத இத்திட்டத்தை தமிழக அரசு சட்டமாக்கி தமிழகம் முழுவதும்; செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- மோகன், உசிலம்பட்டி