Home செய்திகள் மீண்டும் இருளை நோக்கி பாம்பன் பாலம்.

மீண்டும் இருளை நோக்கி பாம்பன் பாலம்.

by mohan

இந்தியப் புகழ் பெற்ற பாம்பன் பாலம் இன்று மெல்ல மெல்ல அதன் பொழிவுகளை இழந்து வருகிறது.பாம்பன் ரோடு பாலத்தின் இரு புறங்களிலும் அமைந்துள்ள மின் விளக்குகள் சரியாக எரியாத நிலையில் உள்ளன..ஒரு சில விளக்குகள் மட்டுமே எரியும் நிலையில்அதுவும்பகலிலும் எரிந்துகொண்டிருக்கின்றன.தற்போது அந்க விளக்குகளைத் தாங்கி நிற்கும் கம்பங்களும் உறுதி இழந்து ஒடிந்து நிற்கின்றன.இதனால் வாகனங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் கம்பங்கள் விழும் வாய்ப்பு உள்ளது.இரவினில் பாம்பன் பாலத்தின் மீது செல்லும் வாகனஓட்டிகளுக்கு இந்த மின்விளக்குகள்தான் உறுதுணையாக இருந்தது.தற்போது வெளிச்சமும் இல்லாமலும் எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழக்காத்திருக்கும் மின் கம்பத்தினாலும் ஒருவித அச்சத்துடனே வாகனங்கள் பாம்பன் பாலத்தை கடக்க வேண்டியுள்ளது.இதனை விரைவில் சம்மந்தப்பட்ட அதிகாாிகள் சாி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாம்பன் பாலத்தின் புகழை நேசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!